
ஆன்மீகச் சிகரம்–சதுரகிரி !! ஓரடி எடுத்து வையுங்கள்… ஒருபடி சிவனுக்குள் நுழையுங்கள்!"
தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற சிவன் மலையேற்ற தளங்களில் ஒன்றாக விளங்கும் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அருகில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் சித்தர்களின் பூமி என்று அழைக்கப்படுகிறது.
அடர்ந்த வனப்பகுதியில் ஈசன் ஐந்து வகையான லிங்கங்களாக காட்சி தருகிறார். மாதம் தோறும் அமாவாசை, பௌர்ணமி ,பிரதோஷம் என எட்டு நாட்கள் மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஆடி அமாவாசை, முன்னோர்களை வழிபடும் புனித நாளாகும். இந்த நாளில் சதுரகிரி மலைக்குச் சென்று வழிபடுவது மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.
அமாவாசை தினம்: ஜூலை 24, வியாழக்கிழமை
அமாவாசை திதி : ஜூலை 24 இரவு 2:29 மணிக்கு ஆரம்பித்து ஜூலை 25 அதிகாலை 12:41 மணிக்கு முடிவடைகிறது. .
மலை ஏறும் நேரம்:காலை 6 மணி முதல் மதியம் 3 மணி வரை
Comments
No comments yet. Be the first to comment!